Skip to main content
Close

Meta விளம்பர மேலாளருடன் தொடங்குதல்

Meta விளம்பர மேலாளருடன் தொடங்குதல்

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Beginner
  • Rating
    Average rating: 5.0 1 review
  • Add Activity to Favorites

Meta விளம்பர மேலாளர் கணக்கை அமைக்கும் முறை மற்றும் விளம்பரப்படுத்தும் முறை குறித்து உங்களுக்கு இந்த அமர்வில் கற்பிக்கப்படுகிறது.

இந்தப் பாடம் உங்களை இவற்றுக்குத் தயார்படுத்துகிறது:

  • ஒரு Meta விளம்பர மேலாளர் கணக்கை அமைக்கவும்.
  • ஒரு விளம்பரப் பிரச்சாரத்தை வடிவமைக்கவும்.
  • Meta விளம்பர மேலாளர் பிரச்சார வடிவமைப்பில் பணிபுரியுங்கள். 

Meta விளம்பர மேலாளரில் விளம்பரங்களை உருவாக்குதல்

Meta விளம்பர மேலாளர் என்பது அனைத்து Meta தொழில்நுட்பங்களிலும் அதிநவீன விளம்பரங்களைக் காட்டுவதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது விளம்பரங்களை உருவாக்குவதற்கும், அவை எப்போது, ​​எங்கு காட்டப்படும் என்பதை நிர்வகிப்பதற்கும், பிரச்சாரங்கள் சிறப்பாகச் செயல்படும் விதம் பற்றி கண்காணிப்பதற்கும் அனைத்திற்குமான ஒரே கருவியாகும். விளம்பர மேலாளர் ஒவ்வொரு அனுபவ நிலையிலுள்ள விளம்பரதாரர்களும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


விளம்பரங்களை நிர்வகிக்க உங்கள் வணிகம் விளம்பர மேலாளரைப் பயன்படுத்தலாம் மற்றும் பல தளங்களில் உங்கள் முயற்சிகளின் கண்ணோட்டத்தைப் பார்க்கலாம். உங்கள் பிரச்சாரங்களில் எந்த மீடியா விவரங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, உங்கள் வணிக இலக்குகளை அடைவதற்காக, உங்கள் பட்ஜெட்டையும் கால அளவையும் அதிகரித்து உங்கள் விளம்பரங்களை சரிசெய்யலாம்.


எடுத்துக்காட்டாக, Little Lemonஐச் சேர்ந்த தஹ்ரிஷா, உணவகத்திற்கான விளம்பரங்களை அளவிட விளம்பர மேலாளரில் உள்ள மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்த விரும்புகிறார். விளம்பர மேலாளரை அமைப்பது முதல் விளம்பரத்தை உருவாக்குவது வரை ஒரு வணிகம் எவ்வாறு செய்யலாம் என்பதற்கு Little Lemonஐ எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தலாம். 

விளம்பர மேலாளரில் விளம்பரம் செய்யத் தயாராகுதல்

எந்தப் பதிவுகள் அதிக ஊடாடல்களை ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்த்தவுடன், நீங்கள் விரும்பிய பிரச்சார பலன்களை அடைய விளம்பர மேலாளரைப் பயன்படுத்தலாம். 


ஒவ்வொரு தனிநபர் Facebook கணக்கிலும் அதற்கு தொடர்புடைய விளம்பர மேலாளர் கணக்கு உள்ளது, ஆனால் விளம்பரங்களை உருவாக்குவதற்கு விளம்பரதாரர்களுக்கு Facebook Business பக்கம் அல்லது Instagram Business கணக்கின் அனுமதி தேவைப்படும். 

விளம்பர மேலாளர் கணக்கை அமைக்கும்போது, உங்கள் விளம்பரக் கணக்கிற்கான பின்வரும் விவரங்களை அடையாளங்காண வேண்டும்:


  • செலாவணி

  • நேர மண்டலம்
  • செலவு வரம்பு
  • பேமெண்ட் செலுத்தும் விதம்

விளம்பரங்களைக் காட்டத் தொடங்க, இந்தப் படிநிலைகளை நிறைவு செய்யவும்.

மேலும் அறிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும். 

Meta விளம்பர மேலாளர் பிரச்சார வடிவமைப்பு

இப்போது உங்கள் கணக்கை அமைத்துவிட்டீர்கள், சில அடிப்படை விளம்பரங்களைப் பற்றி விளம்பர மேலாளரில் அறிந்து கொள்வோம். நீங்கள் உருவாக்கும் விளம்பரங்கள் விளம்பர மேலாளரில் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன: பிரச்சாரங்கள், விளம்பரத் தொகுப்புகள் மற்றும் விளம்பரங்கள். மொத்தமாக, இந்தப் பிரிவுகள் பிரச்சார வடிவமைப்பு என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒன்றாகச் செயல்படும் விதம் பற்றி அறிந்துகொள்வது, உங்கள் விளம்பரங்கள் நீங்கள் விரும்பும் வழியில் காட்டப்படவும் சரியான பயனர்களைச் சென்றடையவும் உதவும். 

தஹ்ரிஷா Little Lemonக்காக விளம்பர மேலாளர் கணக்கை அமைத்துள்ளார், அத்துடன் விளம்பரப்படுத்துவதற்கு தயாராக உள்ளார். அவருக்கு பல தனித்துவமான இலக்குகள் உள்ளன, மேலும் அவருடைய விளம்பரங்களின் வெற்றியை அளவிடுவதற்கும், அவர் தனது பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிப்பதை உறுதிப்படுத்துவதற்கும் தனது விளம்பரங்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

பிரச்சாரம்

பிரச்சார வடிவமைப்பின் முதல் நிலை என்பது பிரச்சாரம் ஆகும், அங்கு உங்கள் விளம்பரத்திற்கான ஒரு குறிக்கோளை நீங்கள் தேர்வுசெய்வீர்கள். ஒரு குறிக்கோள் என்பதுஉங்கள் வணிக இலக்கு அல்லது உங்கள் விளம்பரத்தைப் பார்க்கும்போது பயனர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதாகும். எடுத்துக்காட்டாக, உங்கள் வலைதளத்திற்கான ட்ராஃபிக்கை அதிகரிக்க அல்லது உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாய்ப்புள்ள பார்வையாளர்களை அடையாளங்காண விரும்பலாம். 


ஆறு குறிக்கோள்கள் உள்ளன: , டிராஃபிக், ஈடுபாடு, லீடுகள், செயலி மூலம் விளம்பரப்படுத்துதல் மற்றும் விற்பனை. உங்கள் குறிக்கோளைப் பொறுத்து, உங்கள் விளம்பரத்திற்கான இலக்கை நீங்கள் அமைக்க வேண்டியிருக்கும். இலக்கு என்பது உங்கள் விளம்பரத்தைக் கிளிக் செய்யும்போது பயனர்கள் சென்றடையும் இடமாகும். உங்கள் இலக்கை வெளிப்புற வலைதளத்திற்கு, மேம்பாட்டாளர்களுக்கான Meta தளத்தில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி செயலி, Messenger அல்லது WhatsApp ஆகியவற்றிற்கு அமைக்கலாம்.


விளம்பரத் தொகுப்பு

உங்கள் குறிக்கோளை அமைத்தவுடன், விளம்பரத் தொகுப்புகளை வடிவமைக்கத் தொடங்கலாம். ஒரு விளம்பரத் தொகுப்பு என்பது பிரச்சாரத்தின் கீழ் உள்ளமைக்கப்பட்டுள்ளது, அத்துடன் இந்த நிலையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் விளம்பர நிலையில், கடைசி நிலையில் உங்களுக்குக் கிடைக்கும் விருப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். 


விளம்பரத் தொகுப்பு நிலையில் நீங்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான விஷயங்களில் உங்கள் இலக்கிடுதல் உத்தியும் ஒன்றாகும். ஒரு பிரச்சாரத்தில் பல விளம்பரத் தொகுப்புகளை நீங்கள் வைத்திருக்கலாம், இது பிற்காலத்தில் உங்கள் விளம்பரங்களுக்காக நீங்கள் இலக்கிடும் பார்வையாளர்களை பிரிக்க உதவும்.


A/B சோதனையிடல்

 

பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு அல்லது விளம்பர நிலையில் A/B சோதனையிடலை இயக்குவதற்கான விருப்பத்தேர்வும் உங்களுக்கு இருக்கும். A/B சோதனையிடலானது, எந்த உத்தி சிறப்பாகச் செயல்படும் என்பதைத் தீர்மானிக்கவும் எதிர்காலத்தில் செய்யப்படும் பிரச்சாரங்களை மேம்படுத்தவும் உங்கள் விளம்பரப் படைப்பு, பார்வையாளர்கள் அல்லது விளம்பர இடம் போன்ற வேரியபில்களை மாற்ற உங்களுக்கு உதவுகிறது. A/B சோதனையிடலானது உங்கள் பார்வையாளர்களை சமமாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் உள்ள முடிவுகளை அளவிடும், இதனால் நீங்கள் வெவ்வேறு விளம்பரப்படுத்துதல் உத்திகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அல்லது உங்களின் தற்போது செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு எதிராக ஒரு புதிய உத்தி ஏற்படுத்தும் வித்தியாசத்தை அளவிட முயற்சிக்கும்போது அதைப் பயன்படுத்தலாம்.

விளம்பர இடம், பட்ஜெட் மற்றும் திட்டமிடுதல்


உங்கள் விளம்பர இடங்களையும் தேர்வுசெய்து, உங்கள்  பட்ஜெட்டை அமைக்கவும், அத்துடன் விளம்பரத் தொகுப்பு நிலையில் உங்களின் திட்டமிடல் விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

மேலும் அறிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும். 

விளம்பரம்

இந்த இறுதி நிலை என்பது உங்கள் விளம்பரத்தின் விளம்பர உள்ளடக்க மீடியா விவரங்களை நீங்கள் தனிப்பயனாக்குவதாகும். பலதரப்பட்ட வடிவங்களைச் சோதிக்க, ஒரே விளம்பரத் தொகுப்பில் பல விளம்பரங்களைக் கொண்டிருக்கலாம். இந்த நிலையில், விளம்பர வாசகங்கள், படம் அல்லது காணொளி போன்ற மீடியா விவரங்கள் உட்பட உங்கள் விளம்பரப் படைப்பை நீங்கள் தீர்மானிப்பீர்கள், மேலும் செயல் பொத்தானை அமைப்பீர்கள்.


மேலும் அறிய ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும். 


Little Lemon ஒரு பிரச்சாரத்தை அமைத்தல்

தஹ்ரிஷா Little Lemon இன் விளம்பரத்தைத் தொடங்கத் தயாராக இருக்கிறார், அத்துடன் விளம்பர மேலாளரில் உள்ள மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்த விரும்புகிறார். அவர் விளம்பர மேலாளர் கணக்கை அமைத்து, பிரச்சார வடிவமைப்பைப் புரிந்துகொள்கிறார். இப்போது அவர் பிரச்சாரங்களை கட்டமைக்கத் தயாராக உள்ளார். 


தஹ்ரிஷா இப்போது விளம்பர மேலாளரைப் பயன்படுத்தத் தொடங்கும் விதம் பற்றி அறிந்திருப்பதால், அவர் Little Lemonக்காக விளம்பரப் பிரச்சாரங்களைக் காட்டத் தொடங்கலாம். அடுத்த பாடத்தில், ஒரு வணிகமானது அதன் வணிக இலக்குகளுடன் ஒத்துப்போகும் ஒரு விளம்பரக் குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


நினைவில்கொள்வதற்கான முக்கிய விஷயங்கள்

ஒருங்கிணைந்த விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் விளம்பர மேலாளரைப் பயன்படுத்தவும். 




பிரச்சாரம், விளம்பரத் தொகுப்பு மற்றும் விளம்பர நிலைகள் மூலம் உங்கள் பிரச்சார வடிவமைப்பை வரையறுக்கவும்.